இன்னும் எத்தனை நாளைக்கு நாம் சுரணை அற்ற மனிதர்களாக இருக்கப்போகிறோம். கண் முன் நடக்கும் அநியாத்தை தட்டிகேட்கும் துணிவு தான் இல்லை,புறக்கணிக்கும் துணிவு கூடவா இல்லை.
நான் தமிழ் நாடு முழுக்க சுற்றும் ஒரு சராசரி விற்பனை பிரதிநிதி. தனி மனித வாழ்விலும் , தொழிலும் முடிந்த அளவுக்கு நேர்மையாக வாழ வேண்டும் என்று உங்களை போல வாழ்பவன். என் தொழில் நிமித்தமாக மாநகர பேருந்து நிலையங்களில் பேருந்துக்காக காத்திருப்பேன். வெயிலுக்கு இதமாக ஒரு குளிர்பானம் அருந்தலாம் என்று கேட்டால் பத்து ரூபாய் பொருளை பன்னிரண்டு ரூபாய்க்கு விற்கிறார்கள். ஏன் என்று கேட்டால் இங்கே எல்லாம் அப்படி தான். இஷ்டம் இருந்த வாங்குங்க இல்லையென்றால் கிளம்புங்க என்று சொல்லி அவமானப் படுத்துகிறார்கள் . சரியான காரணத்தை சொல்லுங்கள் என்றுகேட்டால் கடை வாடகை அதிகம் என்று சொல்கிறார்கள். உங்களின் விற்பனையும் இங்கே அதிகம் தானே என்று கேட்டால் இங்கே எல்லாமே அப்படி தான் . வியாபாரத்தை கெடுக்காதே கிளம்பு என்று ஒருமையில் பேசி அவமானப் படுத்துகிறார்கள்.
பேருந்து நிலைய போலீசாரை அணுகினால் இதெல்லாம் ஒரு புகாரா ? கிளம்புங்க சார் என்று அலட்சியமாய் பதில் சொல்கிறார்கள். குற்றத்தில் சிறு குற்றம் பெருங்குற்றம் பாகுபடுதுகிரார்கள். இச்சிறு குற்றம் ஒரு நாளைக்கு பத்துலட்சம் முறைக்கும் மேலாக நடை பெறும்போது இது பெரும் குற்றம் இல்லையா..
இதற்க்கு தீர்வு தான் என்ன ? கோர்ட் , கேசு என்று அலையமுடியாது. ஒவ்வொருவருக்கும் நிறைய வேலைகள் இருக்கிறது. பிறகு என்னதான் செய்யலாம். புறக்கணிப்போம். மாநகரப் பேருந்து நிலையங்களில் பொருட்கள் வாங்குவதை புறக்கணிப்போம். நியாயமான விலையில் அவர்கள் விற்கும் வரை புறக்கணிப்போம். இது ஒரு அமைதிப்போராட்டம். சென்னை கோயம்பேடு , மதுரை மாட்டுத்தாவணி, திருச்சி சத்திரம், கோயம்புத்தூர் , சேலம் , திருநெல்வேலி, ஈரோடு என எல்லா மாநகர பேருந்து நிலையங்களிலும் பொருட்கள் வாங்குவதை புறக்கணிப்போம்.
இந்த புறக்கணிப்பை வரும் தை பொங்கல் முதல் தொடங்குவோம். வியாபாரிகளும் , அரசும் உணரும் வரை இதை தொடருவோம்.
இதை படிக்கும் ஒவ்வொரு பயணியும் இந்த அமைதி போராட்டத்தை தொடருவதொடு மட்டுமில்லாமல் குறைந்த பட்சம் ஒரு பத்து பேருக்காவது இதை கடத்துங்கள்.
நாட்டில் மாற்றம் வேண்டும் என்று விரும்புபவர்கள் இதை நடை முறைப்படுத்துங்கள் .
Tuesday, January 12, 2010
Subscribe to:
Posts (Atom)